இலங்கை அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ராஜபக்ஷக்கள் நாட்டை சிறிது சிறிதாக விற்க முற்சித்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிரப் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நேற்றுடன் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பிரதமர் பதவிக்கு வந்து ஒரு மாதகாலமாகிறது. இருப்பினும் அவரால் நாட்டிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
நாட்டில் நாளுக்கு நாள் டீசல், அரிசி, பால்மா உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது.
மக்கள் தத்தமது சொத்துகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள், பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள், திருடர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று விசேடமாக பொலிஸார் தற்போது அறிவித்துகொண்டு வருகின்றனர்.
அந்த அளவுக்கு நாட்டில் மக்களிற்கு கஷ்டத்தை கொடுத்துள்ளனர்.
அதேபோல நாட்டின் சொத்துகளை விற்பதை நிறுத்தவில்லை. கடந்த காலங்களில் மின்சார சபை தொடர்பாக கூறப்பட்ட விடயம் அதானியின் தொடர்பு காணப்படுகிறது.
இந் நாட்டின் மக்களிற்கு கூறுகிறேன், நாட்டில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை சிறிது சிறிதாக விற்க முற்படுகின்றனர் இது சரியான விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.