இலங்கையுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் USAID கைச்சாத்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்படவுள்ளது.
அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) வழங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த தொகை ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு USAID உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர்.