நாட்டில் ஏற்ப்பட்டுள்ல கடும் நெருக்கடியால் தெஹிவளை, மிருகக்காட்சிசாலை உட்பட நாட்டின் ஏனைய மிருகக்காட்சி சாலைகளிலுள்ள மிருகங்களுக்கு நாளாந்தம் உணவு வழங்குவதற்குக்கூட பணம் இல்லை என மிருகக்காட்சிசாலை திணைக்கள அதிகாரிகள், விவசாய, வன ஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை வன ஜீவராசிகள் திணைக்களத்தில் நேற்று 31 ஆம் திகதி நடைபெற்ற பேச்சின்போது , மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி
அதேவேளை நெருகடி நிலையில் இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு உல்லாச பயணிகளின் வருகை பெருமளவில் குறைந்துள்ளது.
மேலும் உணவு வகைகளின் விலைகள் பெருமளவு உயர்ந்துள்ளதாலும் மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு வழங்குவதற்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.