இலங்கையில் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஜனனி மற்றும் ஏடீகே க்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
நாளுக்குள் நாள் கொடுக்கப்படும் புதிய புதிய டாஸ்க்குகளினால் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதி கொள்கின்றனர்.
புதிய டாஸ்க்காக ஜனனியிடம் இந்த வீட்டில் முகமுடி அணிந்த நபர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு உடனே ஏடிகே போலியானவர் என்று ஜனனி கூற இது ஏடிகேவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கை போல அவள் மீது பாசம் வைத்திருந்தேன். அதை கொச்சைப்படுத்தி விட்டார். அடுத்தவாரம் நான் தான் எலிமினேட் ஆவேன் என்று சக போட்டியாளர்களிடம் கூறினார்.
இதனை அவரிடம் இருந்து எதிர்ப்பார்க்க வில்லை என்று ஏடிகே குறிப்பிட்டார். ஜனனியும் பதிலுக்கு நான் உண்மையை தான் கூறினேன் என்று அவரை காயப்படுத்தி விட்டார்.
இது பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.