கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.ஒன்றாறியோவின் மிசிசாகா நகரில் வசிப்பவர் சிவராமன் (65). இவருக்கு தான் லொட்டரியில் $75,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து சிவராமன் கூறுகையில், முதலில் பரிசு பணம் $75,000 என்பதை பார்த்தேன்.
ஆனால் எனக்கு இந்த பரிசு விழுந்ததை நம்ப முடியவில்லை. இதன் காரணமாக மேலும் ஐந்து முறை லொட்டரி டிக்கெட்டை ஸ்கேன் செய்து பார்த்த பிறகே உறுதி செய்து கொண்டேன்.
எனக்கு முதல் முறையாக லொட்டரியில் பரிசு விழவில்லை, ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லொட்டோ மேக்ஸில் $7,000 பரிசு விழுந்திருக்கிறது. இந்த கொரோனா தொற்று பிரச்சினைகள் முடிந்த பின்னர் இலங்கை மற்றும் கரீபியனுக்கு செல்ல விரும்புகிறேன்
பரிசு விழுந்தது குறித்து என் மகளுக்கு போன் செய்து கூறினேன், அவர் மிகவும் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தாள் என கூறியுள்ளார்.