இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னதாக, மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்திருந்தது.
இதனையடுத்தே, இலங்கைக்கு வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு karihaalan News
No Comments1 Min Read