இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபா அல்லது 10,500 கோடி ரூபா விரைவில் செலுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எனினும் எரிபொருள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டு விநியோகத்தை பேணுவதற்கு தேவையான திட்டங்கள் வகுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடனான எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.