பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.