இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் பேரிச்சம்பழம் உண்பதை பார்த்திருப்போம். ஆனால் அதை தவிரவும் பல நோய்களை போக்கும் வல்லமை பேரிச்சம்பழங்களுக்கு உண்டு.
பேரிச்சம்பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட பாலில் ஊற வைத்து எடுத்து கொண்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
பேரிச்சம்பழம் ஊறப் போட்ட பால்
பேரிச்சம்பழத்தை ஊற போட்ட பாலை தேன் விட்டு அருந்தும்போது நாள்பட்ட இருமல் குணமாகும்.
கொதிக்கும் பாலில் சில பேரிச்சம் பழங்களை போட்டு மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டை இதமாகும். அதிகமான இதயத் துடிப்பு, இதய பிரச்சனை கூட சரியாகும்.
மூன்று நோய்களுக்கு ஒரே தீர்வு
இரத்த சோகை, நரம்பு சார்ந்த நோய், விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்ய பேரிச்சம் பழத்திற்கு சக்தி உண்டு.
முழு நாள் அல்லது இரவு மட்டும் பேரிச்சையை பாலில் ஊற வையுங்கள். அதனை மறுநாள் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வாசனையும், நிறமும் வேண்டுமெனில் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி போடலாம்.
தூக்கத்திற்கு
தூக்கம் இல்லாமல் வேதனைப்படுபவர்கள் வெந்நீரில் பேரிச்சம் பழத்தை போட்டு குடிக்கலாம்.
பேரீச்சம்பழம் உண்பதால் கிடைக்கும் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரை உங்களை உற்சாகமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
மலச்சிக்கல்
பேரிச்சம் பழத்தை 500 மிலி பாலில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனை காலை வெறும் வயிற்றில் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
காலை உணவுடன் சில பேரிச்சம் பழங்களை உண்பது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு
பேரிச்சம்பழம் உண்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிரிக்கலாம். ஆகவே தினசரி 2 முதல் 3 பேரிச்சம்பழங்களை உண்ணலாம்.
இதன் மூலம் பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
கட்டுக்குள் வரும் உயர் இரத்த அழுத்தம்
கொஞ்சம் பேரிச்சம் பழங்களை பாலில் ஊற வைத்து காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பு உண்ணுங்கள்.
வித்த பெண்கள்
பிரசவித்த பெண்கள் பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழங்களை தொடர்ந்து உண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. தாய்ப்பால் சுரப்பும் அதிகமாகும்.

