இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் இராணுவ வீரர்களால் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும், குளிரூட்டப்பட்ட மற்றும் பல செயல்பாட்டு தற்கால டிஜிட்டல் அம்சங்களை கொண்ட சுற்றுச்சூழல் நடைமுறைகளுக்கமைவான பஸ் தரிப்பிடம் (16) மாலை பத்தரமுல்லையிலுள்ள ´தியத உயன´ பகுதிக்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த தரிப்பிட கட்டமைப்புக்குள் தன்னியக்க காசு எடுக்கும் இயந்திரம், பயணிகளுக்கான ஆசனங்கள், இணைய வசதி, குளிரூட்டப்பட்ட அமர்வு பகுதி, சிசிடிவி கண்காணிப்பு தொகுதி, தானியங்கி கதவுகளுடன் கூடிய இரு நுழைவாயில்கள், நகர வரைப்பட வரைபு, விளம்பரங்களுக்கான காட்சித்திரை, சிறிய ரக விற்பனை நிலையம் ஆகியவற்றையும் , பஸ்கள் புறப்படும் நேர அட்டவணைகளையும் கொண்டுள்ளது.
இத்திட்டமானது பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடைய ஆலோசனைக்கமைய இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் இந்து சமரகோனின் மேற்பார்வையில் இது நிர்மாணிக்கப்பட்டது.
பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரல் சவேந்திர சில்வா. சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுடன் ரிப்பன் வெட்டிய பின்னர் பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கக்கூடிய இந்த பஸ் தரிப்பிடம் மற்றும் நலன்புரி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவிற்குப் பின்னர் அதன் நிர்வாக பணிகளுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அதற்குள் நிறுவப்பட்டிருக்கும் விற்பனை நிலையம் விற்பனை நிலைய நிர்வாகியிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி மேற்படி தரப்பினரால் புதிய பஸ் தரிப்பிடத்தின் விற்பனை நிலையத்தின் விநியோக நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இராணுவ தளபதியால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளீடுகள் இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் படைத் தளபதியினால் மேம்படுத்துத்தப்பட்டு அமைக்கப்பட்ட இந்த பஸ் தரிப்பிடம் 20 x 8 அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.