அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட உள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.