இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.