இந்தியாவில் இரயிலில் சிக்கி உயிரிழக்க வேண்டிய நபரை, பொலிசார் ஒருவர் தன்னுடைய சமயோசித செயலால் அவரை காப்பாற்றிய வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் இரயிலில் ஏற முயன்றாரோ அல்லது இறங்க முயன்றாரோ என்பது சரியாக தெரியவில்லை.
ஆனால், இரயில் புறப்படும் போது, திடீரென்று அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு நடைமேடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக ஓடி, சாமர்த்தியமாக செயல்பட்டு, அவரை இரயில் மற்றும் நடைமேடைக்கு இடையில் சிக்காமல் வெளியில் இழுத்தார்.