உதவி வழங்கப்பட்ட இடம்: இயக்கச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி
உதவித் தொகை:272,750.00 ரூபாய்
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், இசை வழி போராளியாகவும் திகழும் இசைப் போராளி வேடன் அவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் “கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ், 272,750.00 ரூபாய் பெறுமதியிலான நிழல் பிரதி (Photocopy) எடுக்கும் இயந்திரம் ஒன்று, இயக்கச்சி மகாவித்தியாலயத்தின் 350 மாணவர்களின் அத்தியாவசிய கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த மனிதநேயப் பணிக்கு தாராளமாக நிதி பங்களிப்பு வழங்கிய இசைப் போராளி திரு. வேடன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் – Germany ❤️
“கல்விக்கு கரம் கொடுப்போம்; எதிர்காலத்திற்கு ஒளி ஏற்றுவோம்.”
இயக்கச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி உதவித் தொகை:272,750.00 ரூபாய்
No Comments1 Min Read

