பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ஒரு முக்கிய ஊழல் வழக்கில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததுள்ளதுடன் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2023 முதல் சுமார் 200 வழக்குகளில் கான் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சமீபத்திய தண்டனை அவரை மௌனிக்க அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்படுவதாக அவரது தரப்பு கூறுகிறது.
“நான் எந்த ஒப்பந்தமும் செய்ய மாட்டேன் அல்லது எந்த நிவாரணமும் பெற மாட்டேன்” என்று கான் தண்டனை பெற்ற பிறகு நீதிமன்ற அறைக்குள் செய்தியாளர்களிடம் கூறினார்.
கான் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள சிறையில் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் கூடியது, மேலும் அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து நிறுவிய அல்-காதிர் டிரஸ்ட் என்ற நலன்புரி அறக்கட்டளை தொடர்பாக அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. ”
வழக்கு விசாரணை தனது வழக்கை நிரூபித்துள்ளது. கான் குற்றவாளி” என்று நீதிபதி நசீர் ஜாவேத் ராணா கூறினார். கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பீபிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தார். சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பீபி, தண்டனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகள் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டவை என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்டவை என்றும் கான் கூறுகிறார்.
கடந்த ஒரு மாதமாக தண்டனை பல முறை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலில் இருந்து பின்வாங்குவதற்காக இராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள கானை அழுத்தம் கொடுக்க சிறைத்தண்டனை பயன்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2022 இல் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து, கான் முன்னோடியில்லாத வகையில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். அதில் அவர் நாட்டின் சக்திவாய்ந்த ஜெனரல்களை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
கானுக்கு முன்னர் நான்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. அவற்றில் இரண்டு ரத்து செய்யப்பட்டன. மற்ற இரண்டு வழக்குகளில் தண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக அவர் சிறையில் இருந்தார்.
கானின் தடுப்புக்காவல் “சட்டப்பூர்வ அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அவர் அரசியல் பதவிக்கு போட்டியிடுவதைத் தகுதி நீக்கம் செய்யும் நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது” என்று ஐ.நா. நிபுணர் குழு கடந்த ஆண்டு கண்டறிந்தது.
பெப்ரவரி தேர்தலில் கான் போட்டியிட தடை விதிக்கப்பட்டது, மேலும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி பரவலான அடக்குமுறையால் பாதிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் பிடிஐ வேறு எந்தக் கட்சியையும் விட அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் இராணுவ அமைப்பின் செல்வாக்கிற்கு மிகவும் வளைந்து கொடுக்கும் கட்சிகளின் கூட்டணி அவர்களை அதிகாரத்திலிருந்து விலக்கியது.