மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர் களுடன் வீண் விவாதம் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். பொறுமை தேவைப்படும் நாள்.
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நல்ல மாற்றங்கள் நிறைந்த நாள்.
மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் எதிர்பா ராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண் டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.
கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
துலாம்: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
விருச்சிகம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் வீண்டென்ஷன் வந்து செல்லும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.
மகரம்: தந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் அது தவறாக போய் முடியும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்த மாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.