மேஷம்இன்று நன்மைகள் உண்டாகு (ம். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6
ரிஷபம்இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
மிதுனம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
கடகம்இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9
சிம்மம்இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
கன்னிஇன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3
துலாம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
விருச்சிகம்இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6
தனுசுஇன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5
மகரம்இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9
கும்பம்இன்று மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3
மீனம்இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7