தமிழ் – சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
அதேசமயம் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

