விரதங்களுள் சிறந்தது வரலட்சுமி விரதம் என்கிறது சாஸ்திரங்கள். அந்த வகையில் இன்று வரலட்சுமி விரதம். ஆகஸ்ட் 16ஆம்திகதி 2024 இன்று மிக சிறப்பான நாள்.
காரணம் இன்று ஆடி மாதம் கடைசிநாள் அத்துடன் ஆடி கடைசி வெள்ளியும் இணைந்து வருகிறது. குடும்பத்தின் வறுமை ஒழிந்து செல்வம் பெருகவும், கணவரின் ஆயுள் நலனைப் பெருக்கவும் சுமங்கலி பெண்களால் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
வரலட்சுமி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் பார்வதி தேவி, முருகப் பெருமானை பெற்றெடுத்ததாகவும், விக்ரமாதித்தயன் இழந்த ராஜ்ஜியம், செல்வம் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு, கேது, சேர்ந்து இருந்தால் அவர்கள் கண்டிப்பாக இந்த வரலட்சுமி விரதத்தை இருக்க வேண்டும்.
திருமணம் ஆனது முதலே கணவன்-மனைவி பிரச்சனையாக உள்ளவர்கள், விவாகரத்து, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்பவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வரலட்சுமி விரதத்தை இருக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு காரணமானவர் சுக்கிர பகவான் ஆவார்.. தீராத நோய், நீண்ட காலமாக நோயால் துன்பப்படுபவர்கள் மேலும் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க, அனைவருமே இந்த விரதம் இருக்கலாம்.
இன்று அரிசி, துவரம் பருப்பு போன்ற பொருட்களை வாங்கலாம்.. அப்படி வாங்கினால் அதனை வரலட்சுமி நோம்பு பூஜை அறையில் வைத்து வழிபட்ட பிறகு, மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
எதுவும் வாங்க முடியவில்லை என்கிறவர்கள், எளிமையாக மஞ்சள், உப்பு ஆகிய இரண்டையும் வாங்கி, பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.