இந்தியாவில் என்.சி.ஆர் கார்ப்பரேஷன் நிறுவனமானது UPI-(enabled interoperable cardless cash withdrawing system)-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதாவது சுருக்கமாக ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம், National Payments Corporation of India (என்.பி.சி.ஐ) மற்றும் சிட்டி யூனியன் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு பிஸிக்கல் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தேவையில்லாமல் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க உதவும். சிட்டி யூனியன் வங்கி, நாடு முழுவதும் உள்ள 1,500 ஏடிஎம்களில் ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது என்று கூறியுள்ளது.
இந்த புதிய வசதியின் உதவியுடன், பயனர்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் யுபிஐ-எனேபில்ட் BHIM, Paytm, GPay, PhonePe போன்ற எந்தவொரு பயன்பாட்டையும் பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும்.
மேலும், இந்த குறிப்பிட்ட வசதியை ஆதரிக்கும் எந்த ஏடிஎம்-க்கும் சென்று மெஷினில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள். பின்னர், நீங்கள் பெற விரும்பும் சரியான தொகையை உள்ளிடவும்.
விருப்பமான யுபிஐ-எனேபில்ட் மொபைல் ஆப்பைப் பயன்படுத்தி பரிவர்த்தனைக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும். பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்ட பிறகு நீங்கள் பணத்தை பெறுவீர்கள். QR குறியீடுகள் ஒவ்வொரு முறையும் மாறும் என்பதால், அதை நகலெடுக்க முடியாது. இது இந்த செயல்முறையின் கீழ் பணப்பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பதையும் உறுதி செய்கிறது.
இந்த புதிய முறையின் கீழ் பணம் எடுப்பது, ஆரம்பத்தில் ரூ.5000 க்கு கீழ் மூடப்பட வாய்ப்புள்ளது, இது பின்னர் அதிகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இதுசார்ந்த அறிவிப்பு அடுத்த இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படலாம். சிட்டி யூனியன் ஏடிஎம்களில் இந்த வசதியை அனுமதிக்க அதனிடம் இருக்கும் மென்பொருளை மேம்படுத்தியுள்ளதாக என்சிஆர் கார்ப்பரேஷன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.