இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இரு போகங்களிலும் மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கு போதுமான உரம் காணப்படவில்லை எனவும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்