இந்தோனிசியாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவை நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான அனுமதியை நாடாளுமன்ற தெரிவுக்குழு வழங்கியுள்ளது. அதேவேளை ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அத்மிரால் ஜயனாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விவசாய, வனவிலங்கு, வனஜீவராசிகள், தேசிய கொள்கைகள், சுகாதாரம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுகளுக்காக நியமிக்கப்பட்ட செலாளர்களுக்கான அனுமதியை நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு வழங்கியுள்ளது.