இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு மேலும் இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே சனத் ஜயசூரிய இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் பிரச்சினையாக மாறியுள்ள மருத்துவ பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இந்திய உதவியை கிரிக்கெட் வீரர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது பற்றாக்குறையாக உள்ள புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை சனத் ஜயசூரிய கோரியுள்ளார்.
ஜெயசூர்யாவின் கோரிக்கைக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டிய மருத்துவப் பொருட்கள் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாக்லே விளக்கமளித்துள்ளார்