இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் தூக்க மாத்திரைகளை இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவரை மரைன் பொலிஸார் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிஸார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படகையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி சென்ற பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.