இந்தியா இலங்கைக்கு 3.3 தொன் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று குறித்த மருந்து பொருட்களை இலங்கையில் சுவ செரிய மருத்துவ சேவை அதிகாரிகளிடம் கையளித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மருந்துப்பொருட்களை கையளித்துள்ளார். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே இந்தியாவிடமிருந்து இலங்கை மக்களுக்கு உலருணவுப்பொதிகள் அனுப்பிவைக்கபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது