ஒரு சுருட்டுச் சுத்தும் தொழிலாழியின், 18 வயது நிரம்பிய மகளுக்கு நேர்ந்த கொடுமை இது
கோழி பிடிப்பதற்காக அந்த வளவிற்குள் வந்த இரண்டு இந்தியப் படையினர் அந்த மாணவியைக் கண்டுவிட்டனர்
தந்தை ஏதோ காரியமாக வெளியில் சென்றுவிட தாயும் மகளும் மட்டுமே அன்றையதினம் வீட்டில் இருந்தார்கள் துப்பாக்கியை நீட்டியபடி தாயை அழைத்துச் சென்ற ஒரு கயவன் அந்த தாயை துப்பாக்கி முனையில் நிறுத்திவைத்தான்
மற்றவன் மகளை இழுத்துச் சென்று, “கூச்சலிட்டால் தாயைச் சுட்டுக் கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டினான் தாயின் முன்னிலையிலேயே மகள் கடும் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டாள்
இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில்; நிலைகொண்ட காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற ஒரு சில கொடூரங்களை ஆவணப்படுத்தியுள்ள ஒளியாவணம் இந்த ‘அவலங்களின் அத்தியாயம்’ நிகழ்ச்சி: