எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை நகராட்சி சபையைச் சேர்ந்த ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் நடந்தபோது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

