பொதுவாகவே ஆண்கள் என்றால் பெண்களின் அழகுக்கு தான் முக்கியத்தும் கொடுப்பார்கள் என நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த ஆண்கள் அழகான பெண்களை விட புத்திசாலியான பெண்களையே அதிகம் விரும்புவார்களாம். அப்படி அறிவிற்கு முக்கியத்துவம் கொதுக்கும் ஆண் ராசியினர் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினர் இயல்பிலேயே அதீத புத்திசாலிகளாக திகழ்வார்கள். உடல் அழகில் இந்த ராசியினரை ஈர்ப்பது மிகவும் கடினம்.
அறிவாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் பேசும் பெண்களையே இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
கன்னி
கன்னி ராசியினர் இயல்பாகவே எதையும் ஆய்வு செய்பவர்களாக இருப்பார்கள்.இந்த ராசியினருக்கு கூர்மையாக அறிவு இருக்கும்.
எல்லா துறை பற்றியும் போதிய விடயங்களை அறிந்திருக்க வேண்டும் என ஆசைப்படும் அவர்கள் திருமணத்தின் போதும் பெண்ணின் அழகை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மகரம்
மகர ராசியினர் மிகவும் யதார்த வாதிகளாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் எப்போதும் இலக்கு இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
அறிவுபூர்வமான விடயங்களை குறித்து எப்போதும் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் இவர்கள் காதல் செய்யும் பெண் அல்லது மனைவி அழகாக இருப்பதை விட அறிவாக இருப்பதே இவர்களுக்கு திருப்தி கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர் எப்போதும் நடைமுறை வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.இந்த ராசியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் அழகை விட அறிவுக்கே முக்கியத்துவமளிப்பார்கள்.
தெளிவாகவும் அறிவாகவும் பேசும் பெண்கள் மீதே இவர்கள் மனம் அதிக ஆர்வம் காட்டும். இவர்கள் எப்போதும் பல் துறை சாந்த அறிவுடையவர்களாக இருப்பதனால் இவர்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களாலேயே அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர்.