பழங்கால நம்பிக்கையின்படி எண்கணியத்தின் மூலம் ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவர்களின் குணாதிசயங்களை கூற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொருவர் பிறந்த எண்களின் கூட்தொகையும் குணாதிசயங்களையும் வைத்து அவர்களின் போக்குகளை சொல்ல முடியும்.
பிறந்த இலக்கத்தின் கூட்டுத்தொகை 7 ஆக இருக்கும் நபர்கள் எப்போதும் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை விவாதிப்பார்கள். இவர்களை நம்பி யாரும் ரகசியத்தை சொல்ல கூடாது.
இந்த நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும். 8,17,26 போன்ற திகதிளில் பிறந்தவர்கள் மிகவும் ஆர்வமுடன் செயல்படுவார்கள்.
இந்த தேதியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை பற்றிய தகவல்களை சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
9,27,18 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சமூக ரீதியாக வலிமையானவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் சமூக தொடர்புகளை அதிகம் விரும்புவார்கள்.
இந்த குணாதசியத்தால் அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை பற்றி விவாதிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். எண் ஐந்தில் பிறந்தவர்கள் கிசுகிசுப்புக்கு பெயர் போனவர்கள்.
இவர்களிடம் ஒரு விஷயம் கிடைத்து விட்டால் அதை பலவாறு பரப்புவதில் வல்லவர்கள்.