ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்.
நவகிரகங்களிலேயே சனிக்கு அடுத்தப்படியாக மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்கள் என்றால் அது நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தான். இவ்விரு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள்.
அந்த வகையில் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களும் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார்கள்.
தற்போது ராகு மேஷ ராசியில் குரு பகவானுடன் இணைந்து, குரு சண்டாள யோகத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த யோகமானது அக்டோபர் 30 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
ஏனெனில் இந்த ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.
ராகு மீன ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியானது சிறப்பாக இருக்காது.
மிகுந்த உடல் சோர்வு, நிறைய செலவுகள், டென்சன் நிறைந்த குடும்ப வாழ்க்கை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். பணியிடத்தில் எவ்வித நற்செய்திகளையும் பெற முடியாது.
செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வருமானம் குறைவாகவே இருக்கும். மிகுந்த மன உளைச்சலை சந்திக்க நேரிடும்.
இதய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்து இருக்கும்.
தாயின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்.
மிகுந்த நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாமியாருடன் எந்த பரிவர்த்தனைகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் அதிக பணம் கொடுக்க வேண்டாம்.
உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பேச்சே பல வேலைகளை கெடுக்கலாம். வணிகர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
ராகுவின் நிலையால் உங்கள் வேலையில் மாற்றங்களைக் காணலாம். நீதிமன்ற விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
சொத்தை விற்க விரும்பினால், நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைத்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி நல்ல பலனைத் தராது.
மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். சிறு விஷயங்களுக்கும் ஆழமாக யோசிப்பீர்கள்.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
சிலருக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும்.
யாரையும் நம்பாதீர்கள். வேலைகளில் தடைகளை சந்திக்கக்கூடும். பணப்பற்றாக்குறையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வியாபாரத்தில் லாபம் குறையும். குடும்பச் சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.