இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, காலிமுகத்திடல் முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம் இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இலங்கையில் பல பகுதிகளில் இருந்தும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaska) பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் விண்ணதிரும் அளவிற்கு, போராட்டக்காரர்கள் இணைந்து தேசிய கீதம் இசைத்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது