ஆரோக்கியமான உணவு என்றால் அது நாம் வீடுகளில் சமிக்கும் உணவுதான். அவ்வாறு நாம் வீடுகளில் சமைக்கையில் பல நேரங்களில் உணவுகள் மிச்சப்படலாம். மீதமுள்ள உணவை பின்னரோ அல்லது மறுநாளோ நாம் சூடுபடுத்தி சாப்பிடுவோம்.
ஆனால், இந்த எஞ்சிய உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆய்வுகளின்படி, சில உணவுகள் மற்றும் பொருட்கள், மீண்டும் சூடுபடுத்தும் போது, தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஆபத்தைக்கூட அது வரவழைத்துவிடுமாம்.
எந்த உணவுகளை நாம் சூடுபடுத்தி உண்ணக்கூடாது?
முட்டை;
தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். முட்டை எப்போதும் சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கின்றன. மேலும் முட்டைகளை சமைக்கப் பயன்படுத்தப்படும் மென்மையான வெப்பம் பாக்டீரியாவைக் கொல்லத் தவறிவிடும்.
எனவே, நீங்கள் அவற்றை பின்னர் சாப்பிட்டால், அவை உங்கள் உடலுக்குள் சில பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
பீட்ரூட்;
பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடுகள் நிறைந்துள்ளன. இந்த கலவை நிறைந்த உணவுகளை மீண்டும் சூடாக்கும்போது, அவை நைட்ரைட்டுகளாகவும் பின்னர் நைட்ரோசமைன்களாகவும் மாற்றப்படுகின்றன.
இவை உங்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஆதலால், பீட்ருட்டை சமைக்கும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கீரை;
பொதுவாக கீரை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சில நேரங்களில் கீரை உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கீரையில் நைட்ரேட் அதிகம் உள்ளது. அவை மீண்டும் சூடுபடுத்தும் போது, புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரோசமைனாக மாறி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சிக்கன் உணவு;
முட்டைகளைப் போலவே, பச்சைக் கோழியிலும் சால்மோனெல்லா உள்ளது. இது மீண்டும் சூடுபடுத்தும்போது, அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சிக்கன் உணவுகளை நீங்கள் சமைத்திருந்தால், மீண்டும் சூடுபடுத்தாமல் சாப்பிடுங்கள். சிக்கனை மறுநாள் வைத்திருந்தும் சாப்பிட வேண்டாம். இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரியளவில் தீங்கு விளைவிக்கும்.
எண்ணெய்கள்;
ஆளிவிதை, ஆலிவ் எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய்கள் போன்ற குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களில் ஒமேகா -3 கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஆனால் அவை மீண்டும் சூடுபடுத்தப்படும் போது, அவை நிலையற்றதாகவும், ஆரோக்கியமற்றதாகவும் மாறும்.
எனவே, இந்த எண்ணெய் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை.