தன் மனதுக்கு பிடித்த வேலை கிடைத்ததும், மகிழ்ச்சியில் பேஸ்புக்கில் சீருடையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் ஒரு மனைவி அவ்வளவுதான், Niamh Brett (28) என்ற அந்த பெண்ணின் கணவரான Adam Miller (30)க்கு ஆ த்திரம் தாங்கவில்லை
நீ எப்படி ஆம்புலன்சில் வேலைக்கு சேரலாம் நீ வீட்டுக்கு கொரோனாவைக் கொண்டுவந்து விடப்போகிறாய், கு ழந்தையை நோய்வாய்ப்படச் செய்யப்போகிறாய் என்று சொல்லி சண்டை போட்டிருக்கிறார் Miller
அத்துடன், Niamh வீட்டுக்கு வந்ததும், அவரை அடித்து கையை உடைத்து, இனி நீ எப்படி வேலைக்கு போகிறாய் என்று பார்க்கிறேன் என்று கூறி, இரண்டு மாதங்கள் அவரை வேலைக்கு போகவிடாமல் செய்துவிட்டார் Miller முதலில் இதை யாரிடமும் சொல்லாமல், படிக்கட்டிலிருந்து விழுந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார் Niamh
கை எலும்பு முறிந்து, கைக்குள் பிளேட்டும், ஸ்குரூக்களுமாக நிரந்த வடுவுடன் பின்னர் பொலிசரிடம் சென்ற Niamh, நான் அந்த ஆளை சந்தித்திருக்கவே கூடாது, என் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார் என்று கூறி அழுதிருக்கிறார் Miller கைது செய்யப்பட்டுள்ளார் ஜூன் மாதம் அவருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது