இளைஞர் ஒருவர், ஆப்பிள் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்ய, டெலிவரியாக ஐபோன் வடிவ காபி டேபிள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அ தி ர்ச்சியை அளித்துள்ளது.
அதில் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் வழங்குவாக தெரிவிக்க அவரும் உடனடியாக அதனை ஆர்டர் செய்து விட்டார். பின்னர் டெலிவரிக்காக காத்திருந்த அவருக்கு, குறிப்பிட்ட நாளில் பார்சல் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வந்ததோ அவர் அளவுக்கு உயரமான பார்சல். என்னடா போன் இவ்ளோ பெரிய பார்சலில் வந்திருக்கிறது என அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
பார்சலை திறந்து பார்த்த அவருக்கு அடுத்ததாக ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே ஆப்பிள் ஐபோனுக்கு பதிலாக, ஐபோன் வடிவிலான காபி டேபிள் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்த தகவல்களை அவர் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
அதில், ஆர்டர் செய்யும் முன் தயாரிப்பு விவரங்களை காண தவறி, தான் முட்டாள் தனமாக நடந்து கொண்டதாகவும், விலை மலிவானது என்பதற்காக ஆராயாமல் எதையும் விலை கொடுத்து அவசரப்பட்டு வாங்காதீர்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் ஐபோன் வடிவ காபி டேபிளின் புகைப்படத்தையும் அவர் பகிர, அது வைரலாக பரவி வருகிறது.