2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் அரசாங்கம் வெடித்து சிதறிவிடும் என்பது மிகத் தெளிவாக புலப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardene)தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெடித்து சிதறும் போது மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரே தலைமைத்துவத்தை கொண்டுள்ள கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பட்டாளர்களுடனான சந்திப்பில் ருவான் விஜேவர்தன இதனை கூறியுள்ளார்.
கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி பல சவால்களை எதிர்கொண்டது. எனினும் கட்சியை வலுப்படுத்த பல தரப்பினர் தற்போது உதவி வருகின்றனர். இந்த ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீர்மானகரமான ஆண்டு எனவும் விஜேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.