பிக்பாஸ் வீட்டில் இன்று காலை தீபக் – அருண் இருவருக்கும் இடையில் பாரிய சண்டை வெடித்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் 10வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரந்தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
இந்த சீசன் முடிவதற்கு 35 முதல் 40 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வாரம் எலிமினேஷனில் முதலில் ஆர்.ஜே.ஆனந்தியும், இரண்டாவதாக சாச்சனாவும் வெளியேற்றப்பட்டனர்.
சாச்சனா வெளியேற்றப்பட்ட போது முத்துக்குமரன் கண்ணீர் மல்கினார். இந்த வார நாமினேஷனில் 9 போட்டியாளர்களின் பெயர்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஜாக்குலின் அருணை காரியவாதி என்று நாமினேஷன் செய்தார். இதனை தொடர்ந்து அருண்- தீபக் இருவருக்கும் இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரில் யார் பக்கம் தவறு இருக்கின்றது என்பது சரியாக தெரியவில்லை. விரைவில் இருவரில் ஒருவர் வெளியேறுவார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்
இந்த வார கேப்டனாக ரஞ்சித் இருப்பதால் அவர் தப்பித்து கொண்டார். அத்துடன் நாமினேஷன் பாஸ் மஞ்சரியிடம் உள்ளதால் அவரும் தப்பினார்.
முத்துக்குமரனை விஷாலை தவிர வேறு யாரும் நாமினேட் செய்யவில்லை. இதனால் ஒரு வாக்கு மட்டுமே பெற்று அவர் நாமினேஷனில் இருந்து தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.