ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற மதிப்பை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும் எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன.
குறித்த பட்டியலின் படி இந்தியாவின் முகேஷ் அம்பானி சுமார் 7.7 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக சுமார் 6 லட்சம் கோடி ரூபாயுடன் அதானி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
1.எலான் மஸ்க் (Elon Musk)– 205 பில்லியன் அமெரிக்க டொலர்
2. ஜெஃப் பெஜாஸ்(Jeff Bejas) – 188 பில்லியன் அமெரிக்க டொலர்
3. பெர்னார்டு அர்னால்ட் (Bernard Arnold)– 153 பில்லியன் அமெரிக்க டொலர்
4. பில்கேட்ஸ் (Bill Gates)– 124 பில்லியன் அமெரிக்க டொலர்
5. வார்ரன் பஃபெட் (Warren Buffett)– 119 பில்லியன் அமெரிக்க டொலர்
6. லேரி பேஜ் (Larry Page)– 116 பில்லியன் அமெரிக்க டொலர்
7. செர்ஜி பிரின் (Sergey Brin)– 116 பில்லியன் அமெரிக்க டொலர்
8. ஸ்டீவ் பால்பர் (Steve Palper)– 107 பில்லியன் அமெரிக்க டொலர்
9. முகேஷ் அம்பானி (Mukesh Ambani)– 103 பில்லியன் அமெரிக்க டொலர்
10. பெர்ட்ராண்ட் பியூச் (Bertrand Peugeot)- 102 பில்லியன் அமெரிக்க டொலர்