அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதிகமான பொதுமக்கள் நடமாடிய பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருந்ததுடன் துப்பாக்கி தாரி சுமார் 100 தடவைகளுக்கு மேலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக
பொலிசார் தெரித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல என பொரிசார் அறிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து இரண்டு ரைஃபிள் ரக துப்பாபக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியாவில் இவ்வாறான துப்பாக்கிச் சூடடுச் சம்பவங்கள் நடப்பது குறைவானது என பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டடுள்ளார்
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் எதற்காக இதனை மேற்கொண்டார் என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் கடந்த 1996 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற தனிநபர் தாக்குதலின் போது 35 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு அவுஸ்ரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.