ஒரு அழகான பிரித்தானிய இளம்பெண், ஆனால் அவரைக் காதலிக்க முன்வருபவர்கள் எல்லாம் அவரது வீட்டில் அவர் வைத்திருக்கும் பொருட்களைக் கண்டதும், காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்களாம்
அப்படி என்ன வைத்திருக்கிறார் அவர்?
பர்மிங்காமைச் சேர்ந்த Jessica Powell (20)ஐப் பார்ப்பவர்கள், உடனே அவர் ஒரு மொடலாகத்தான் இருக்கவேண்டும் என முடிவு செய்துவிடுகிறார்களாம்ஆனால், அவரைக் காதலிக்க முன்வருபவர்கள், அவரது பொழுதுபோக்கைக் குறித்து அறிந்ததும், ஒன்றில் மெதுவாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம், அல்லது, நாம் நண்பர்களாக மட்டும் இருப்போமா என்று கேட்கிறார்களாம்
அப்படி என்ன பொழுதுபோக்கு Jessicaவுடையது?
இறந்த விலங்குகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதன் தோல் சதை எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எந்த மண்டையோடு முதலான எலும்புகளை சேகரிப்பதுதான் Jessicaவின் பொழுதுபோக்கு!ஆக, அழகான Jessicaவை பார்த்து, ஹாய் காதலிக்கலாமா என முதலில் கேட்பவர்கள், அவரது வீட்டுக்கு வந்ததும் அவர்களுடைய காதலும், சில நேரம் அவர்களுமே காணாமல் போய்விட, தன் பொழுதுபோக்கைக் குறித்து மறைக்கவும் விரும்பாமல், அதை விடவும் விரும்பாமல், தனக்கேற்ற ஒருவர் ஒரு நாள் வருவார் என காத்திருக்கிறார்…