இங்கிலாந்தில் வாழும் அம்பிகா அவர்கள் லண்டனில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை கடந்த மாசி மாதம் 27-ம் திகதி காலை முதல் தற்போதுவரை உடல் நிலை மோசமடைந்து வரும் நிலையிலும் தொடர்ந்து வருகிறார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் போன்ற 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து இவ்வாறு நீரை மட்டும் அருந்தி சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமார் பிப்ரவரி 27 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நீதிக்காகப் போராடும் பெண்மணியின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.