அம்பாறை – மருதமுனை பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்தின் சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று நேற்று(28-03-2024) உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை பெரிய நீலாவணை – பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இரண்டு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பெரிய நீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிள்ளைகளின் தந்தை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான் நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, 63 வயதான சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.