ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரம் இருக்கும்போது அந்நியனாகவும், அதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01-02-2024) மட்டக்களப்பு நகரில் உள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் கட்டடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவரும் ஹேமியோபதி வைத்தியசாலைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தனது சொந்த நிதியில் இந்த தளபாடங்கள் வழங்கப்பட்டன.
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பிரவீனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன், பாராளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு இணைப்பாளர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.