இயக்குநரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி, நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம் உருவாகியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு வந்த நித்யா மேனனிடம் உதவியாளர் ஒருவர் கைக்கொடுக்க வந்தபோது, எனக்கு உடம்பு சரியில்லை என்று அவருக்கு கைக்கொடுக்க மறுத்துவிட்டார்.
அதன்பின் நிகழ்ச்சிக்கு வந்த வினய் மற்றும் ஜெயம் ரவியுடன் நெருக்கமாக சென்று வரவேற்றும் இயக்குநர் மிஸ்கின் கன்னத்தில் முத்தமிட்டும் இருக்கிறார் நித்யா மேனன். இதனை பார்த்த பலர் கண்டபடி நித்யா மேனனை விமர்சித்து வருகிறார்கள்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகைகள் தானே என அசாட்டாக கையை கொடு என சிலர் சினிமா விழாக்களில் நடந்துக்கொள்கிறார்கள். எனக்கு அது சுத்தமாக பிடிக்காது.
தெரியாத நபர்களிடம் கைக்கொடுக்கும் பழக்கத்தை தான் கடைபிடிப்பதில்லை என்றும் அந்த நேரத்தில் அதை சொன்னாலும் புரியாது என்பதால் தவிர்த்துவிடுவேன்.
சாதாரண ஒரு பொண்ணுக்கிட்ட போய் யாராவது கையை கொடுண்ணு சொல்வாங்களா? நடிகைன்னா பப்ளிக் பிராப்பர்ட்டின்னு நினைச்சிக்கிறாங்க என்று நித்யா மேனன் கூறியிருக்கிறார்.
இதனால் தான் நித்யா மேனன் கொடுக்காமல் போனாரோ என்றும் சிலர் அப்படி இருந்திருந்தாலும் பொது மேடையில் அப்படி நடந்திருக்கக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.