ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு, நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்மானங்களை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எமது தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சியை மறுசீரமைக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடிய முக்கியஸ்தர்கள் இது குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.