இலங்கையில் ஜூன் 07 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க துரித எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் செயற்படவுள்ள 1965 என்ற துரித எண்ணை தொடர்புகொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் அறிவிக்க முடியும்.
24 மணிநேரமும் இயங்கும் இந்த எண், அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலணியுடன் தொடர்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.