பொதுவாக இந்து சமய கருத்துக்களின் அடிப்படையிலும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரமும் அதிகாலை 3 முதல் 4 மணிவரையிலான காலம் பிரம்மமுகூர்த்த நேரம் என வரையறுக்கப்படுகின்றது.
இந்த நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு விதித்திரமான வகையில் திகிலூட்டும் கனவுகள் வருவதுன்டு இன்னும் சிலருக்கு எந்த காரணமும் இன்றி இந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் விழிப்பு ஏற்படுவதுண்டு.
இந்த நேரத்தில் கனவுகள் வருவது ஏன்? இது பழிக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். முக்கியமாக இந்த நேரத்தில் விழிப்பு நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருக்கு பிரம்மமுகூர்த்த நேரத்தில் விழிப்புணர்வு வருகின்றமையானது எதிர்காலம் குறித்து பிரபஞ்சம் சில விடயங்களை எச்சரிப்பதாக பார்க்கப்படுகின்றது. இந்த நேரமானது சாத்திரங்களின் அடிப்படையில் மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
பிரம்மமுகூர்த்தம் எனப்படுவது படைப்பாற்றல் நிறைந்த நேரமாகும். இந்த நேரத்தில் இயற்கையில் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக செயற்படக்கூடிய நேரமாக இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் முழித்து விட்டால், நீங்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றத்திற்கான ஆரம்ப நிலையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்
எனவே இந்த நேரத்தில் விழித்துக்கொண்டால் இதனை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் முக்கியமான வேலைகள் குறித்து பிரம்மமுகூர்த்த நேரத்தில் வெறுமனே சிந்திப்பது கூட பெரியளவில் வெற்றியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த நேரத்தில் நாம் மனதார ஆசைப்படும் விடயங்கள் நடக்க வேண்டும் என இறைவனை பிராத்தித்தால் அது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். இந்த நேரத்துக்கு இயற்கையாகவே பெரிய ஆற்றல் காணப்படுகின்றது.
இந்த நேரத்தில் தோன்றும் கனவுகள் பழிப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக கனவு சாஸ்திரத்திலும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இந்த பிரம்மமுகூர்த்த நேரம் நேர்மறை ஆற்றலுடன் தொடர்புபடுவதே இதற்கு காணரம்.
அதனால் இந்த நேரங்களில் வரும் கனவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் இந்த நேரத்தில் இறைவழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானது.