இந்தியாவில் மனைவி மற்றும் மாமியார் துன்புறுத்தியதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தின் வடோதராவை சேர்ந்தவர் ஷிஷிர் தர்ஜி. இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தர்ஜி இரு தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், என் மனைவி, மாமியார், மாமனார் டார்ச்சர் மற்றும் துன்புறுத்தலால் தான் தற்கொலை முடிவை எடுக்கிறேன் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து தர்ஜி தாய் கூறுகையில், தர்ஜியின் மனைவி மோனிகா ஒரு ஆண்டாக தனது பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்தார்.தனது குழந்தையை காண தர்ஜி சென்ற போது கூட அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து என் மகனை துன்புறுத்தி வந்தனர் என கூறியுள்ளார்.பொலிசார் இனி தான் மோனிகா மற்றும் அவர் பெற்றோரிடம் விசாரணையை துவங்கவுள்ளனர்.மேலும் தர்ஜியின் இறுதிச்சடங்கு தொடர்பான விடயங்கள் முடிந்த பின்னர் அவர் தாயாரிடம் விசாரணை நடத்தி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.