முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது சகோதரரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளுக்குள் பிரவேசித்துள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்பு
பொதுஜன பெரமுனவின் அரசியலில் இருந்து அண்மையில் விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
அவர்களுடன் கோட்டாபய ராஜபக்க்ஷ, மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு எதிராக செயற்படுவதை மிக தெளிவாக காணக்கூடியதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் உதயங்க வீரதுங்க இதனை கூறியுள்ளார்.