இத்தாலில் G20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அதில் பிரித்தானியா , கனடா உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக பிரான்ஸ் அரசு தலைவர் மைக்கிரான் (Emmanuel Macron) மீது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris johnson) கடும் கோபத்தில் உள்ளார்.
இதனால் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, மேடையில் பிரான்ஸ் அதிபர் நின்றிருந்தார்.
அதேவேளை, அதே மேடைக்கு பொறிஸ் ஜோன்சனும் (boris johnson) அவசரமாக படி ஏறி சென்று கொண்டு இருந்தார். அவர் செல்லும் வேகத்தை பார்த்த, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin trudeau), பொறிஸ் ஜோன்சனின் கைகளை பிடித்துக்கொண்டார்.
அதோடு மெதுவாக செல்லுமாறும் மேடையில் உள்ள பிரான்ஸ் அதிபரை ஒன்று செய்யவேண்டாம் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (justin trudeau) நகைச்சுவையாக கூறினார்.
இதனையடுத்து ஜோ பைடன் (Joe biden)முதல் சபையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்களாம்.