மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மனிதர்களைப் போல பேசும் காகத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பால்கர் மாவட்டம் வாடா தாலுகா, கார்காவ் கிராமத்தை சேர்ந்த தனுஜா முக்னே என்பவர், தனது தோட்டத்தில் காயமடைந்த ஒரு காகத்தை கண்டுபிடித்து, அதை வீட்டிற்கு கொண்டு வந்து சிகிச்சையளித்தார்.காகம் குணமடைந்து பறக்கத் தொடங்கியதும், அது வேறு எங்கும் செல்லாமல், தனுஜாவின் வீட்டைச் சுற்றி சுற்றி பறந்தது.
தனுஜா முக்னே காகத்துடன் பாசப்பூர்வமாக பழகி, உணவளித்ததால், காகமும் அவருடன் நெருக்கமாக பழகியது.இந்த நிலையில், அந்த காகம் திடீரென “காகா” (மாமா), “பாபா” (தந்தை), “மம்மி” (தாய்) போன்ற வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்கத் தொடங்கியது.வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரும் இதனை பார்த்து வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்பகுதி மக்கள் நேரில் வந்து, பேசும் காகத்தை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த தனிச்சிறப்பான சம்பவம், விலங்குகளுக்கும் நமது பாசம் எவ்வளவு முக்கியமெனும் உண்மையை மீண்டும் நினைவூட்டியுள்ளது.